Enable Javscript for better performance
செம்மரக்கட்டை வழக்கு:வேலூர் விரைந்தது தனிப்படை- Dinamani

சுடச்சுட

    

    ரூ.4 கோடி செம்மரக்கட்டை கொள்ளை வழக்கு தொடர்பாக, மேலும் சிலரை தேடி தனிப்படை போலீஸார் வேலூர் சென்றுள்ளனர்.

    கோவை, சிங்காநல்லூர் அருகேயுள்ள "கன்டெய்னர் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா' என்ற உள்நாட்டு சரக்கு முனையத்தில், கடந்த மாதம் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த காவலாளிகளைத் தாக்கி கன்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 9 டன் செம்மரக்கட்டைகளை லாரிகளில் கொள்ளையடித்துச் சென்றது.

    இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, 15 பேரை கோவை மாநகர போலீஸார் கைது செய்தனர். தற்போது அந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலர் வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்ய கோவை மாநகரக் காவல் உதவி ஆணையர் ரவி தலைமையில் தனிப்படை போலீஸார் வேலூர் சென்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai