Enable Javscript for better performance
செல்போன் கோபுரம் அமைப்பதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    செல்போன் கோபுரம் அமைப்பதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

    By கோவை  |   Published on : 10th June 2014 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த சரோஜா உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

    எங்கள் ஊரில் சுமார் 3,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆணையம்மன்காடு தெருவில் சுமார் 20 வீடுகள் உள்ளன. இந்த இடத்தில் தற்போது தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்த செல்போன் கோபுரம் அளவுக்கதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்தக் கூடியதாகும். செல்போன் கோபுரம் அமைப்பது குறித்து மத்திய அரசின் தொலைதொடர்பு துறையின் விதிமுறைகளை மீறி உரிய துறையினரின் அனுமதியின்றி செல்போன் கோபுரம் அமைக்கப்படுகிறது.

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும், செல்போன் கோபுரங்களால் மனிதர்களும், இயற்கைச் சூழலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எங்கள் பகுதி மக்களின் கருத்து கேட்காமல் செல்போன் கோபுரம் சட்ட விரோதமாக அமைக்கப்படுகிறது. மேலும், இதை எதிர்க்கும் பொதுமக்கள் மீது தனியார் செல்போன் நிறுவனத்தினரும், இடத்தின் உரிமையாளரும் மிரட்டுகின்றனர்.

    எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டா மாறுதலை ரத்து செய்யக் கோரி மனு: ஜோதிபுரம் சாமிசெட்டிபாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள வீரபத்திரசாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை வேறு ஒருவருக்கு பட்டா மாறுதல் செய்ததைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த ருக்குமணி உள்ளிட்ட வாரிசுதாரர்கள் மனு அளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai