சுடச்சுட

  

  சிறுவாணி அணை குடிநீர் குழாய் அடைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை, வரும் 13 ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் நடைபெற உள்ளது.

  கோவை நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது.

  இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 15 மீட்டர். அணையின் நிலமட்டத்துக்கு கீழ் பழங்கால தடுப்பணையும், நீர் தேக்கமும் உள்ளது. மேலும் நிலமட்டத்துக்கு கீழ் 6.9 மீட்டர் வரை நீர்தேக்கமும், குகை பாதையும் உள்ளது.

  அணையின் நீர் மட்டம் நில மட்டத்திற்கு வந்தாலும், இந்தக் குகை பாதை வழியாக 6 கோடி லிட்டர் நீரை பெற முடியும். கடந்த 83 ஆண்டுக்கு முன், அமைக்கப்பட்ட இந்த குகை பாதை வழியாக இதுவரை 30-க்கும் மேற்பட்ட முறை குடிநீர் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  கடந்த 2013 ஆம் ஆண்டில் சிறுவாணி அணையின் நீர் மட்டம் குறைந்த போது, இந்த குகை பாதை வழியாக நீரை எடுத்து விநியோகம் செய்யப்பட்டது.

  இதனிடையே அணையில் உள்ள நீர் தேக்க குகை பாதை வழியை அடைக்க கேரள மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, சிறுவாணி அணை குடிநீர் குழாய் அடைப்பை கைவிடக் கோரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேரள அரசுக்கு கடிதம் எழுதினர்.

  இந்த நிலையில், இரு மாநில அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் (ஜூன் 9) நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்த பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது.

  இந் நிலையில், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி பொறியியல் துறை அதிகாரிகள் அடங்கிய தமிழக அதிகாரிகள் குழுவினரும், கேரள அரசின் நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகளும் இடையே ஜூன் 13 ஆம் தேதி ஆலப்புழையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai