சுடச்சுட

    

    பாசி இயக்குநர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன

    By கோவை,  |   Published on : 10th June 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந் நிறுவன இயக்குநர்கள் உள்பட மூவருக்கும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.

    திருப்பூரைச் சேர்ந்த பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்ததாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந் நிறுவன இயக்குநர்கள் எம்.மோகன்ராஜ், கே.கதிரவன், நிர்வாக இயக்குநர் ஏ.கமலவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது மூவரில் கமலவள்ளி தவிர மற்ற இருவரும் கோவை, சேலம் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவ் வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்படுகிறது. வழக்கில் 1,434 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 81 பேரிடம் சாட்சி விசாரணை நடைபெற்றுள்ளது.

    இந் நிலையில், வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கமலவள்ளி நீதின்றத்துக்கு வந்திருந்தார்.

    கதிரவன், மோகன்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் மூவருக்கும் வழக்கில் சாட்சிகள் 8 பேர் அளித்த வாக்குமூலம் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இவ் வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    அரசு தரப்பு மனுவை ஏற்க மறுப்பு: இவ் வழக்கை முக்கியத்துவம் கருதி நாள்தோறும் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து, கடந்த ஜூன் 4 ஆம் தேதி அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையும் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai