சுடச்சுட

  

  புதிய பொறியியல் கண்டுபிடிப்பு போட்டி: அக்ஷயா கல்லூரி மாணவர்கள் வெற்றி

  By கோவை  |   Published on : 10th June 2014 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவில் நடைபெற்ற பொறியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் அக்ஷயா பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

  சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சமூகம் சார்பில் நடைபெற்ற "பொறியியல் கண்டுபிடிப்பு சவால்-2014' என்ற போட்டியில், அக்ஷயா கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் நான்காம் ஆண்டு மாணவர்கள் விக்னேஷ்ராகவ், எ.அஜித், ஜிஷ்னுகங்காதரன், கெ.எம்.மிதுன் ஆகியோர் உருவாக்கி டி டிரைவ் வாடகை மோட்டார் வாகனங்களின் திசைகள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் அறிவுத்திறமையை மேம்படுத்தும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.கோவை, ஜூன் 9: கோவை மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இணைய ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

  இதுகுறித்து மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் தலைவர் எம்.லோகநாதன், நிர்வாகி ஆர்.எல்.வராதராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

  தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை, கடந்த 2007-ஆம் ஆண்டு அறிவித்தது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ வசதி பெற முடியும். இத்திட்டம் தற்போது நடைமுறைக்கு வர துவங்கி உள்ளது.

  மருத்துவக் காப்பீட்டுத்தின் கீழ் இணைய விரும்பும் ஓய்வூதியதாரர்கள், அதற்காக தனியாக விண்ணப்பித்து காப்பீட்டு அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அமைச்சக மற்றும் பொறியியல் பிரிவில் 600 பேரும், துப்புரவுப் பிரிவில் 1,400 பேரும் என சுமார் 2 ஆயிரம் பேர் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

  இவர்கள் தங்களை காப்பீட்டுத் திட்டத்தின் இணைத்துக் கொள்ள மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதை பெற்று விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai