சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 10th June 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடை எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேட்டுப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    காரமடை சாலை, கோ-ஆப்ரேடிவ் காலனியிலிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு, பள்ளி நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார் . காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ராஜபிரபு, ராயப்பன், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, கோ-ஆப்ரேடிவ் காலனி, காரமடை சாலை வழியாக நகரப் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

    இதில், பள்ளியைச் சேர்ந்த 200 மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளி...மேட்டுப்பாளையம், ஜூன் 9: மேட்டுப்பாளையத்தை அடுத்த ஆலாங்கொம்பு ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளிகள் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி மேட்டுப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது .

     பேரணிக்கு, பள்ளி முதல்வர் ராதிகா தலைமை வகித்தார். நகர காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ராஜபிரபு (போக்குவரத்து), சண்முகசுந்தரம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை, காரமடை ஒன்றியக்குழுத் தலைவர் ராஜ்குமார், துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    இதில், 150-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர்.

    கோ-ஆபரேடிவ் காலனியில் துவங்கிய பேரணி, காரமடை சாலை வழியாக பங்களாமேடு பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai