சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

    By கோவை,  |   Published on : 10th June 2014 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை சொக்கம்புதூர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

    பள்ளியில் உள்ள சுற்றுச் சூழல் பாதுகாப்புக் கழகம், தேசிய மாணவர் படை, சாலைப் பாதுகாப்பு அமைப்பு, சாரணர் படை, செஞ்சிலுவைச் சங்கம், அறிவியல் கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.

    பேரூர் வட்டாட்சியர் காந்திமதி கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் ஜி.செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் கீதா கோபிநாத் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai