சுடச்சுட

    

     பாலத்துறை பகுதியிலுள்ள இரு தோட்டங்களில் மோட்டார் உதிரிபாகங்கள், வயர் திருடியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து மதுக்கரை போலீஸார் கூறியது:

    மதுக்கரையை அடுத்த பாலத்துறை பழனியாண்டவர் கோயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் பி.நஞ்சப்பன்(62). இவர், தனது தோட்டத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது அருகிலிருந்த குமரேசன் என்பவர் தோட்டத்திலிருந்து ஒருவர் இருசக்கர வாகனத்தில் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் வயருடன் சென்று கொண்டிருந்தார்.

    அவர் மீது சந்தேகமடைந்த நஞ்சப்பன், அருகிலிருந்தவர்கள் துணையுடன் அவரைப் பிடித்து மதுக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

    விசாரணையில், அவர், தாரமங்கலத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் முனுசாமி (37) என்பதும், குமரேசன் தோட்டத்திலிருந்து உதிரிபாகங்கள், ஞானவேல் என்பவர் தோட்டத்திலிருந்து வயர் திருடி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து முனுசாமியை கைது செய்த போலீஸார், திருடப்பட்ட பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai