சுடச்சுட

    

    வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது

    By கோவை  |   Published on : 10th June 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் வடமாநில வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

    கோவை, ரங்கேகவுடர் வீதியில் உள்ள வடமாநில வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த ஜிம் ஹக்கிம் உள்பட 13 பேர் கடந்த இரு மாதங்களுக்கு முன் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கு கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

    இந் நிலையில், கஞ்சா விற்றது தொடர்பாக உக்கடம், ஜிம்.எம். நகரைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் (24) என்பவரை பெரியகடை வீதி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வடமாநில வியாபாரிகளிடம் பணம் பறித்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து, முஜிபுர் ரகுமானை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai