சுடச்சுட

  

  கோவையில் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வழக்கில், தீவிரவாதி ஹைதர் அலியை வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கோவையில் கடந்த 1989ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் கோவை, வின்சென்ட் சாலையைச் சேர்ந்தவர் அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலி (45) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

  இவ் வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு, ஹைதர் அலி தொடர்ந்து வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவானார். இந் நிலையில், கடந்த வாரம் கேரள மாநிலம், பாலக்காட்டில் கோவை சிபிசிஐடி போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஹைதர் அலியை சிபிசிஐடி போலீஸார் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, அவரை வரும் 23 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

  ஜாமீன் மனு விசாரணை: இந் நிலையில், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் ஏற்கெனவே ஹைதர் அலியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

  அந்த வழக்கில் ஹைதர் அலியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய்க்கிழமை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஹைதர் அலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் செவ்வாய்க்கிழமை அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai