சுடச்சுட

  

  கோவை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கோவை பாப்பநாயக்கன் புதூர் அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேணுகோபால் (24). இவரது மனைவி சபீனா.

  கர்ப்பமாக இருந்த சபீனா, சீரநாய்க்கன்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். குழந்தை பிறக்கும் தேதிக்கு முன்னதாக சபீனாவிற்கு வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக ஆரம்ப சுகதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

  இரவில் சபீனாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். சபீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  ஆனால், குழந்தை பிறந்தவுடன் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதாக தெரிகிறது. அப்போது மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் அருகில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவரிடம் செவிலியர்கள் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக குழந்தையை பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்.

  ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால்தான் குழந்தை இறந்ததாக கூறி, வேணுகோபாலின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்து வந்த போலீஸார், முற்றுகையிட்டவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai