சுடச்சுட

    

    குடும்ப வறுமை காரணமாக கிணற்றில் குதித்து இளைஞர்  தற்கொலை செய்துகொண்டார்.

    கோவை சின்னவேடம்பட்டியைச் சேர்ந்தவர் பாபு (34). இவரது மனைவி கீதா (26). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    செல்போன் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தார் பாபு. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 6 மாதத்திற்கு முன்பு கடையை காலி செய்துவிட்டு, வீட்டில் இருந்தபடியே செல்போன்

     பழுதுநீக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் திங்கள்கிழமை அவருடைய நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பாபு வீடு திரும்பவில்லை.இதற்கிடையில் கணபதி மணியகாரம்பாளையம் தாகூர் நகர் பகுதியில் உள்ள கிணறு அருகே ஒரு பைக் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அருகே டீ-சர்ட் கிடப்பதாகவும் தகவல் தெரியவந்தது. போலீஸாரும், பாபுவின் குடும்பத்தாரும் அங்கு சென்றனர். அது பாபு ஓட்டிச் சென்ற பைக்தான் என உறுதி செய்யப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து பாபுவின் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்டனர்.இது குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதால் குடும்ப வறுமை காரணமாக பாபு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai