Enable Javscript for better performance
குப்பைக்கு வைத்த தீயால் புகைமூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குப்பைக்கு வைத்த தீயால் புகைமூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிப்பு

    By dn  |   Published on : 11th June 2014 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூரில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்ட தீயால் அதிக புகைமூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

    அன்னூரில் உள்ள 120 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தின் வடக்கு பகுதியில் பேரூராட்சியின் குப்பைகள் தினமும் 5 டன் முதல் 6 டன் வரை கொட்டப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் அங்கிருந்த குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் அதிக புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் சிறுமுகை சாலை, ஓதிமலை  சாலை, இந்திரா நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவியது. அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அன்னூர் வடக்கு பகுதிக்கு மின் இணைப்பை மின் வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

    உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி ராமசாமி தலைமையில் 6 வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai