சுடச்சுட

  

  கேரள ரயில்கள் கோவையில் நின்று செல்ல பாஜக வலியுறுத்தல்

  By dn  |   Published on : 11th June 2014 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை வழியாக இயக்கப்படும் 7 கேரள ரயில்கள், பயணிகளின் வசதி கருதி நின்று செல்ல பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

  இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார், கோவை ரயில் நிலைய மேலாளர் சின்னராஜுடம் அளித்த மனு விவரம்:

  கோவை அருகே உள்ள போத்தனூர் ரயில் நிலையம் வழியாக பல ரயில்கள் கோவை சந்திப்புக்கு வராமல் கேரளத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. இதனால் பல ஊர்களுக்கு செல்லும் கோவை ரயில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

  போத்தனூர் ரயில் நிலையத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால், இரவு நேரத்தில் நின்று செல்லும் ரயில்களால் பயணிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே போத்தனூர் வழியாக இயக்கப்படும் ரயில்களை கோவை வழியாக திருப்பிவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற இரண்டு கேரள ரயில்கள், ஜூலை 1-ஆம் தேதிமுதல் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  தொழில் நகரமாக திகழ்ந்து வரும் கோவையை புறக்கணிப்பதால், பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

  யஷ்வந்த்பூர்-கண்ணனூர் விரைவு ரயில், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் ரயில் ஆகியவற்றை கோவையிலும், லோக்மான்ய திலக்-கோவை விரைவு ரயிலை  ஓமலூரிலும், மாயவரம்-கோவை ஜனசதாப்தி விரைவு ரயிலை இருகூரிலும், யஸ்வந்த்பூர்-கண்ணனூர் விரைவு ரயிலை திருப்பூரிலும் நின்று செல்லும் வகையில் அட்டவணை வெளியிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai