சுடச்சுட

  

  பொள்ளாச்சி தாலுகாவிற்கு உள்பட்ட கோட்டூர் பகுதியில் விரைவில் அரசு தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட இருப்பதாக வால்பாறை எம்.எல்.ஏ. மா.ஆறுமுகம் கூறினார்.

  வால்பாறை பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்கள். இவர்களது குழுந்தைகளுக்காக வால்பாறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு கல்லூரி தொடங்கப்பட்டது.

  இதே போல் தொழிற்பயிற்சி மையமும் வால்பாறையில் தொடங்கப்பட வேண்டும் என்று வால்பாறை எம்.எல்.ஏ. மா.ஆறுமுகம் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மையம் தொடங்குவதற்கான இடத்தை வால்பாறை பகுதியில் தேர்வு செய்யும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் கடந்த ஆண்டு ஈடுபட்டனர். போதிய  இடம் இல்லாததால், இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டதாகத் தெரிகிறது.

  இந்த நிலையில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைப்பதற்காக கோட்டூர் பகுதியில்  அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடத்தை தேர்வு செய்திருப்பதாகவும், இந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தபின் தொழிற்பயிற்சி மையம் தொடங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்றும்  எம்.எல்.ஏ. கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai