சுடச்சுட

    

    கோவை அரசு மருத்துவமனையில் விரிவான மகப்பேறு சிகிச்சை பிரிவு

    By dn  |   Published on : 11th June 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள விரிவான மகப்பேறு சிகிச்சை பிரிவை வருகிற 18-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒரு நாளைக்கு சராசரியாக 15 முதல் 20 குழந்தைகள் பிறக்கின்றனர். அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் பேருக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பச்சிளம் குழந்தை இறப்பு சதவீதத்தை குறைக்க தமிழக சுகாதார துறை சார்பில் சீமாங் என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை உருவாக்கியது. அதன்படி தமிழ்நாடு சுகாதார திட்ட நிதியில் இருந்து ரூ.6 கோடி மதிப்பில் மகப்பேறு சிகிச்சை பிரிவுடன், சீமாங் என்ற விரிவான மகப்பேறு சிகிச்சை பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை (மருத்துவ பிரிவு) சார்பில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணி ஜனவரி மாதம் முடிவடைந்து, சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சிகிச்சை மையம் 130 படுக்கை வசதி கொண்டது. தமிழ்நாடு சுகாதாரத் திட்ட நிதியில் இருந்து இப் பிரிவுக்கு தேவையான புதிய கட்டில்கள் மற்றும் படுக்கைகள் பெறப்பட்டுள்ளன.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் இந்தப் பிரிவை 18 ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai