Enable Javscript for better performance
டெஸ்க்டாப் டிரைவ்களுக்கு வெஸ்டர்ன் டிஜிட்டல்- Dinamani

சுடச்சுட

    

    வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் டிரைவ்களுக்கு  தேவை அதிகரித்து வருவதாக அந்நிறுவன்ததின் தெற்காசிய நாடுகளுக்கான இயக்குநர் சுப்ரதோ தாஸ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் கடந்த ஓராண்டாக சிறப்புத் தன்மை கொண்ட டெஸ்க்டாப் டிரைவ்களின் தேவை அதிகரித்து வருகிறது. 500 ஜிபி முதல் 1 டிபி வரையிலான ஹார்டு டிஸ்க்குகளை தமிழகத்தில் அதிகம் விரும்புகின்றனர்.

    தமிழக வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கலனாக மட்டுமின்றி வசதிக்கேற்ற டிரைவ்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். வாடிக்கையாளர்களின் இருப்பிடத்துக்குச் சென்று அவர்களின் வசதிக்கேற்ற டிரைவ்களை மாற்றித் தருகிறது வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம்.

    வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனத்திடம் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு அதிகபட்சத் திறன் கொண்ட டிரைவ்கள், 500 ஜிபி முதல் 5 டிபி வரை உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டெஸ்க்டாப் டிரைவ்கள் குறித்து விருப்பத் தேர்வுக்கான கல்வியையும் அளித்து வருகிறது.

    வரும் 15-ஆம் தேதி கோவை புரூக்ஃபீல்டு மாலில் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் தனது பொருள்களைக் காட்சிப்படுத்துகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai