சுடச்சுட

    

    பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகள் 10 நாளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்

    By dn  |   Published on : 11th June 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை பெற 10 நாள்களுக்குள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

    மனவளர்ச்சி குன்றியோர், கடும் பாதிப்புக்குள்ளானவர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர் ஆகிய 4 வகை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதம் ரூ.1,000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்கீழ் பயன்பெறும் 3,078 மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை அவரவர் வங்கி கணக்கிற்கு கருவூலத்தில் இருந்து நேரடியாக அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை மொத்தம் 2,350 நபர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் விவரத்தை  ஒப்படைத்துள்ளதால், அவர்களுக்கு ஏப்ரல் மாதம்முதல் ஜூன் மாதம் வரையிலான தொகை கருவூலத்தில் இருந்து வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. எஞ்சிய 728 நபர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் நகலினை 10 நாள்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காதபட்சத்தில் உதவித்தொகை வழங்க இயலாது. பயனாளிகளின் பெயர் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படும்.

    எனவே, மேற்குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளி மற்றும் அவரது தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலர் இணைந்த சேமிப்பு கணக்கை உடனடியாக தொடங்கி 10 நாள்களுக்குள் கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் இருவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    பராமரிப்பு உதவித்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களும் மேற்படி வங்கி கணக்கு தொடங்கி அதன் விவரத்தை ஒப்படைக்க வேண்டும். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு வங்கியில் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பாதுகாவலர் நியமன சான்று தேவைப்படுபவர்கள் மற்றும் வங்கி கணக்கு தொடங்க இயலாதவர்கள், பெற்றோர் மற்றும் பயனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 0422-2380382 அல்லது 9488252940 அல்லது 9894444954 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai