சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பாம்பு மற்றும் பாம்புக் கடி விழிப்புணர்வு திட்ட அமைப்பான நேஷனல் ஸ்நேக்பைட் இனிஷியேடிவ் என்ற தேசிய அமைப்பின் துவக்க விழா, செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.

    கோவை ஜீவகாருண்யா அறக்கட்டளை, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் கிரீன் கிராஸ் இந்தியா அமைப்பு சார்பில் வனக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் துரைராசு தலைமை வகித்தார். ஜீவகாருண்யா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சியாமளாமாதவி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி திலீப் வரவேற்றார். விழிப்புணர்வு திட்ட அமைப்பை வனக் கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.

    பாம்புக் கடி விழிப்புணர்வு திட்டம் குறித்து அதன் இயக்குநர் ராபின் பெர்னார்டு பேசியது: இந்தியாவில் 270 வகை பாம்புகள் உள்ளன. அவற்றில் 60 வகை பாம்புகளே விஷத்தன்மை கொண்டவை. நாகம், கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன் வகை பாம்புகளே பாம்புக் கடி மரணங்களுக்கு காரணமாக உள்ளன.

    இந்தியாவில் பாம்பு குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததால், ஆண்டுக்கு 50,000 பேர் வரை பாம்புக் கடியினால் உயிரிழக்கின்றனர். இதில் விவசாயிகளும், கிராமப்புற மக்களும்தான் அதிகம். பாம்புக் கடிக்கு இந்தியாவில் முறையான மருந்து, மருத்துவம், மருத்துவர், மருத்துவமனை, மருத்துவ முறை இல்லாததுதான் இதற்கு காரணம்.

    இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வனக் கல்லூரியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள வனத்துறையினர், பள்ளி மாணவ, மாணவியர், மலைவாழ் மற்றும் கிராமப்  பகுதி மக்களுக்கு விசேஷ உபகரணங்கள் மூலம் பாம்புகளை முறையாக கையாள்வது குறித்தும், பாம்புக் கடிக்கு உடனடி சிகிச்சை பெறுவது குறித்தும் இலவச பயிற்சிகளை வழங்குவர்.

    எங்கள் அமைப்பின் மூலமும் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த இலவச சேவையை பயன்படுத்த விரும்பும் பள்ளிகள் 90036-33054 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் வனக் கல்லூரி பேராசிரியர்கள் ரேவதி, பரணீதரன், அறக்கட்டளை நிர்வாகிகள் சரவணன், பிரதீப் ஆகியோர் பேசினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai