Enable Javscript for better performance
பொள்ளாச்சி தனியார் பள்ளிகளில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் உள்ள சில தனியார் பள்ளிகளில், கோவை  மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

    பொள்ளாச்சியில் உள்ள சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்வதாகவும், கோவை முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகியோருக்கு பெற்றோர்கள் தரப்பில் புகார்கள் சென்றன.

    இதன் பேரில் 3 தனியார் பள்ளிகளில் கோவை மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அதிக கட்டணம் வசூல் செய்யக் கூடாது எனவும், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் பள்ளி நிர்வாகங்களை அவர் அறிவுறுத்தினார்.

    ஆய்வாளர் சந்திரன் கூறியது: மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 23 மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் சேர்க்க வேண்டும். அதிகமான விண்ணப்பங்கள் வரும் பள்ளிகளில் பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தி மாணவர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai