சுடச்சுட

    

    கோவையில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாணவியின் தாய் மாமா கோபாலகிருஷ்ணன் (55) உள்பட 5 பேர் கடந்தாண்டு பிப்ரவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இவ் வழக்கு, தற்போது கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இவ் வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவி, நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் எதிர்த்தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் வழக்கு வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai