சுடச்சுட

  

  மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து குளங்களை எடுத்துக்கொள்ள பொதுப்பணித் துறை தீவிரம்?

  By dn  |   Published on : 11th June 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக் கொண்ட 8 குளங்களில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளாததால், அனைத்துக் குளங்களையும் பொதுப்பணித் துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ளத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

  உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், நரசம்பதி, முத்தணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வாம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 குளங்களையும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

  இந்தக் குளங்களை ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் மேம்படுத்துவதற்கு ரூ.200 கோடியை மாநகராட்சி நிர்வாகம் கேட்டது. ஆனால் இத்தொகை கிடைக்கவில்லை. இதனால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இக்குளங்களில் எவ்வித பணிகளையும் மாநகராட்சியால் மேற்கொள்ள முடியவில்லை. அத்துடன் பராமரிப்புக்குத் தேவையான தொழில்நுட்பமும், பணியாளர்களும் மாநகராட்சியிடம் இல்லை.

  இந்தச் சூழ்நிலையில் பல குளங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆகாயத்தாமரை அதிக அளவில் படர்ந்து இருப்பதால் சில குளங்களில் தண்ணீர் இருப்பது தெரிவதில்லை. பல குளங்கள் சாக்கடை நீரால் நிரம்பியுள்ளன.

  வாலாங்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. இதை மாநகராட்சியால் தடுக்க முடியவில்லை. இக்குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதைத் தடுக்க தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டன. சாலைகளும் போடப்பட்டன.

  இந்த நிலையில், குளங்களைப் பாதுகாக்கும் தேசிய திட்டத்தின்கீழ் நிதியைப் பெற்று குளங்களைûப் பாதுகாக்க பொதுப்பணித் துறையினர் தீர்மானித்துள்ளனர்.

  இக்குளங்களைப் புதுப்பித்துத் தங்கள் பராமரிப்பில் எடுத்துக் கொள்வதற்காக, பொதுப்பணித் துறைச் செயலரிடம் கோவை பொதுப்பணித் துறையினர் தகவல் தெரிவித்தனர். விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  உக்கடம் பெரிய குளத்தைப் புதுப்பித்து அங்கு படகுத்துறை அமைத்து சுற்றுலா மையமாக்கவும் பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிங்காநல்லூர் குளத்தைச் சுத்தப்படுத்தி, நிறுத்தப்பட்ட படகுப் போக்குவரத்தை மீண்டும் துவக்கவும் பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai