ரயில்முன் பாய்ந்து இருவர் தற்கொலை
Published on : 11th June 2014 03:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலம் அருகே ரயில்முன் பாய்ந்து இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீஸார் கூறியது: நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலம் அருகே ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓர் ஆணும் பெண்ணும் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்துகொண்டவர், கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சுகுமாரனின் மகன் சதீஷ் (44) என்பது தெரியவந்துள்ளது. பெண்ணின் அடையாளம் தெரியவில்லை.
போத்தனூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.