Enable Javscript for better performance
ஹைதர் அலியை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    ஹைதர் அலியை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

    By dn  |   Published on : 11th June 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஹைதர் அலியை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

    கோவையில் கடந்த 1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், கோவை வின்சென்ட் சாலையைச் சேர்ந்த,  அல்-உம்மா அமைப்பின் ஹைதர் அலி (45) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கில் ஜாமீன் பெற்ற ஹைதர் அலி (படம்), வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவு ஆனார்.

    இதே போல கடந்த 1993-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் ஹைதர் அலி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    தலைமறைவு ஆகி 21 ஆண்டுகள் கழித்து கேரள மாநிலம், பாலக்காட்டில் வைத்து ஹைதர் அலியை கோவை சிபிசிஐடி போலீஸர் கடந்த வாரம் கைது செய்தனர்.

    இந்நிலையில் ஹைதர் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் ஹைதர் அலி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை, கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

    அப்போது ஹைதர் அலியை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஹைதர் அலியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai