சுடச்சுட

  

  நியூ தெய்வா சிட்டி சிகை அலங்கார அறக்கட்டளை சார்பில்  கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை முடி திருத்தம், ஷேவிங் செய்யப்பட்டது.

  திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த அறக்கட்டளையினர், பல்வேறு தரப்பு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

  கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய், எய்ட்ஸ், தீக்காயம், எலும்பு முறிவு, நரம்பியல் பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பாதிப்புகளால் பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இவர்களில் பலர் மாதக்கணக்கில் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், 120 நோயாளிகளுக்கு முடி திருத்தம், ஷேவிங் செய்யப்பட்டது.

  அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் தெய்வராஜ் தலைமையில், நோயாளி

  களுக்கு  அவர்களது படுக்கையிலேயே முடி திருத்தம் செய்யப்பட்டது.

   சுமார் 13 பேர் கொண்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai