Enable Javscript for better performance
எஸ்பிசிஐடி சிறப்பு நுண்ணறிவு பிரிவுபுதிய அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்பிசிஐடி சிறப்பு நுண்ணறிவு பிரிவுபுதிய அலுவலகம் திறப்பு

    By கோவை  |   Published on : 12th June 2014 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் எஸ்பிசிஐடி சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கான புதிய அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார்.

    கோவையில் எஸ்பிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அலுவலகம் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தில் வாடகைக்கு கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இந் நிலையில், கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் விருந்தினர் இல்லம் அருகே ரூ. 14 லட்சம் செலவில் எஸ்பிசிஐடி சிறப்பு நுண்ணறிவு பிரிவினருக்கான புதிய அலுவலகம் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வந்தது.

    கடந்த சில நாள்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருந்த இக் கட்டடம் புதன்கிழமை தமிழக முதல்வரால் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது.

    திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கோவை அலுவலகத்தில் எஸ்பிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். புதன்கிழமையே புதிய அலுவலகத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai