சுடச்சுட

    

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி மனு

    By கோவை  |   Published on : 12th June 2014 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரியும், கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

    கல்வி உரிமை சட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்வதற்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்த போதிலும், சில தனியார் பள்ளிகள் தர மறுக்கின்றன.

    ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் செய்து வருகின்றன.

    தவிர, தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கல்விக்குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பின்னர் இந்திய மாணவர் சங்கத்தினர், முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai