Enable Javscript for better performance
சங்கிலிப் பறிப்பு திருடர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது:

    கோவை, சிங்காநல்லூர் போலீஸார் அதே பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் பைக்கில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், உடுமலையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ் (21), ரூபன்ராஜ் (20) என்பது தெரிந்தது. மேலும், மாநகரில் நிகழ்ந்த மூன்று சங்கிலி பறிப்பு சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai