Enable Javscript for better performance
ஜூலைமுதல் குடிநீர் விண்ணப்பம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜூலை முதல்தேதியில் இருந்து குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பம் பெறப்படும் என்று ஆணையர் க.லதா தெரிவித்தார்.

    கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார் பேசும்போது, "மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கி ஓராண்டுக்கும் மேலாகிறது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் குறித்தும் பொதுமக்கள் கேட்கின்றனர்' என்றார்.

    இதற்குப் பதிலளித்த ஆணையர் க.லதா, மாநகராட்சிப் பகுதியில் வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து குடிநீர் இணைப்புப் பெற விண்ணப்பம் வழங்கப்படும். இதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளில் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினரும் தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து எழுதிக் கொடுங்கள் என்றார்.மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த துணை ஆணையர் சு.சிவராசு, நகரின் முக்கியமான சாலைகளில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai