சுடச்சுட

    

    கோவையில் புதன்கிழமை பெண்ணிடம் நகை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது:

    கோவை, ஆர்.எஸ்.புரம், சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெயேந்திரா மனைவி புஷ்பா. புதன்கிழமை பகலில் இவரது வீட்டுக்கு வந்த இருவர் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டுத் தருவதாக தெரிவித்துள்ளனர். அதை நம்பி அவர்களிடம் தனது 5 பவுன் தங்க நகைகளை புஷ்பா கொடுத்துள்ளார்.அப்போது ஒரு பாத்திரத்தில் மஞ்சள்பொடித் தூவி நகைக்கு பாலிஷ் செய்வது போல் நடித்துள்ளனர். பிறகு பாத்திரத்தை மூடி சிறிது நேரம் கழித்து திறந்து பார்க்கக் கூறி சென்றுள்ளனர்.

    புஷ்பா அவர்கள் சென்று சிறிது நேரம் கழித்து பாத்திரத்தை திறந்து பார்க்கையில் அதில் நகைகள் இல்லை. அதைத் தொடர்ந்து புஷ்பா ஆர்.எஸ்.புரம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதே போல் போத்தனூர், எல்.ஜி. நகரைச் சேர்ந்தவர் சரோஜினி (61). இவர் புதன்கிழமை மாலை வீட்டுக்கு வெளியில் நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் தண்ணீர் கேட்பது போல் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் போத்தனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai