சுடச்சுட

  

  பொள்ளாச்சி நகராட்சி அதிமுக பெண் கவுன்சிலர் தற்கொலை

  By பொள்ளாச்சி  |   Published on : 12th June 2014 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி நகராட்சி 11-ஆவது வார்டு அதிமுக பெண் கவுன்சிலர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  பொள்ளாச்சி, மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). கேட்டரிங் கல்லூரி நடத்தி வரும் இவர், அதிமுக இளைஞர் பாசறையில் கோவை புறநகர் மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கனிமொழி (27) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதில் மிதுன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

  கனிமொழி, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சி 11-ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்தார். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

  இந்நிலையில், கனிமொழி புதன்கிழமை மாலை பள்ளியில் இருந்து வந்தவுடன் வீட்டில் இருந்த அறைக்குள் சென்றுள்ளார். குழந்தை மற்றொரு அறையில் இருந்துள்ளது. தனியாக இருந்த குழந்தை நீண்டநேரம் அழும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கனிமொழியை அழைத்தும் வராததால் சந்தேகமடைந்தனர்.

  இதையடுத்து, ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தபோது, கனிமொழி தூக்கில் தொங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு அதிகக் கடன் இருப்பதாகவும், இதில் மனமுடைந்து கனிமொழி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

  மகாலிங்கபுரம் போலீஸார் கனிமொழியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இந்தச் சம்பவத்தை அறிந்த அதிமுகவினர், கனிமொழியின் உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai