சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறுகள்

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 12th June 2014 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக, வன விலங்குகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஜக்கனாரி வனப்பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பில் 2 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, செந்நாய், மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை உள்பட நீர் நிலைகளில் தேங்கி இருக்கும் நீரைக் கொண்டு தங்கள் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கின்றன.

    வறட்சிக் காலங்களில் வனப்பகுதிக்குள் உணவு, குடிநீர் தேவைக்கு பற்றாக்குறை ஏற்படுவதால், இவைகள் அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகளின் உயிருக்கும், விளை பொருள்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

    இந்நிலையில், தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக யானை உள்ளிட்ட விலங்குகள் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கு மீண்டும் வரத் துவங்கியுள்ளன.

    இதனால் ஏற்படும் மனித-விலங்கு மோதலை தடுத்திடும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் குடிநீர்த் தொட்டிகளை அமைத்திட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி, மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட ஜக்கனாரி பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பில் இரு ஆழ்துளைக் கிணறுகளும், சூரிய ஒளியில்

    இயங்கும் இரு மின் மோட்டார்களும் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் உள்ள 4 குடிநீர்த் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் வனச்சரகத்தில் உள்ள யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தங்கள் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai