சுடச்சுட

    

    : பொள்ளாச்சியில் பேருந்து நிலையம் அருகிலுள்ள டிஇஎல்சி தேவாலய மாணவர் விடுதியில் இருந்து இரண்டு சிறுமிகளைக் கடத்திச்சென்ற மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசிச்சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் டிஇஎல்சி தேவாலயம் செயல்படுகிறது. இந்த தேவாலயம் சார்பாக அதே வளாகத்தில் மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 17 மாணவர்களும் 3 மாணவிகளும் தங்கியிருந்தனர்.

    இந்த மாணவர் விடுதிக்கு புதன்கிழமை (ஜூன் 11) இரவு வந்த இரு மர்ம நபர்கள் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டுள்ளனர். கதவைத் திறந்து தண்ணீர் கொடுத்த சிறுமிகளை அந்த மர்ம நபர்கள் தூக்கிச்செல்ல முயன்றனர். அப்போது, உடன் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

    அந்த மர்ம நபர்கள் கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களைக் காட்டி உடனிருந்த சிறுவர்களை மிரட்டியதுடன், மணிகண்டன் என்ற சிறுவனையும் தாக்கியுள்ளனர். பயந்துபோன சிறுமிகளை அந்த மர்ம நபர்கள் தூக்கிச் சென்றனர்.

    கடத்தப்பட்ட இரு சிறுமிகளும் முறையே 10, 11 வயதுடையவர்கள். இருவரும் அருகிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பும் ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    சிறுமிகளைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள், அருகிலுள்ள சர்வோதயா வணிக வளாகத்தின் மொட்டை மாடிக்குக் கொண்டுசென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிய சிறுமிகளை அங்கேயே வீசிவிட்டுச் சென்றனர்.இந்நிலையில், விடுதி மாணவர்கள் அதிக நேரம் கூச்சலிட்டும் ஹாஸ்டல் வார்டன், காவலாளி உள்ளிட்ட யாரும் வரவில்லை. இதையடுத்து, மாணவர்கள் ஹாஸ்டல் வார்டன் சுரேஷ்குமார் வீட்டிற்குச் சென்று தகவலைத் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, வார்டன் சுரேஷ்குமார், வெளியில் சென்றிருந்த காவலாளி ஏசுதாஸ் ஆகியோர் மாணவிகளைக் காணவில்லையென்று போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவிகளைத் தேடினர்.

    அருகிலிருந்த மொட்டை மாடியில் மயக்க நிலையில் கிடந்த மாணவிகளை மீட்ட போலீஸார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மக்கள் மற்றும் அனைத்து மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் தேவாலய அலுவலகத்தை முற்றுகையிட்டு, நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விடுதி அனுமதியின்றி நடத்தப்பட்டதாகவும் இங்கு பல மோசடிகள் நடப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    மேற்கு மண்டல காவல்துறை டிஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், பொள்ளாச்சி எம்எல்ஏ முத்துகருப்பண்ணசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    சார் ஆட்சியர் மயக்கம்: இவர்களுடன் வந்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பாதிக்கப்பட்ட சிறுமிகளைப் பார்த்தவுடன் மருத்துவமனையிலேயே மயக்கமடைந்தார்.

    சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பொள்ளாச்சியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி சிலை அருகே நடைபெற்றது.

    விடுதிக்கு "சீல்': சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த, அனுமதி பெறாமல் இயங்கிய மாணவர் விடுதி பூட்டி "சீல்' வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த 17 மாணவர்களும் ஒரு சிறுமியும் கோவையிலுள்ள தொண்டு நிறுவனக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

    இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு சிறுமிகளும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தக் குற்றம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரும் மகளிர் காவல்நிலையத்தினரும் விசாரித்து வருகின்றனர்.

    சிறுமியரைக் கடத்தி பலாத்காரம் செய்த காமக்கொடூரன்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai