சுடச்சுட

  

  கோவையில் கழிவுநீர் கிணற்றில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

  இதுகுறித்து, போலீஸார் கூறியது:

  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமநாராயணன் (32). இவர் கோவை, சிட்கோ பகுதியில் உள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கி அவிநாசி சாலை, அரசூர் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் துணை நிலைப் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

  கடந்த மே 24-ஆம் தேதி முதல் ராமநாராயணன் திடீரென மாயமானார். 29-ஆம் தேதி போத்தனூர் போலீஸில் அவர் காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேசமயம் அவரது இருசக்கர வாகனம் 26-ஆம் தேதி மீட்கப்பட்டது.

  இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 11) அவரது உடல் மிகவும் சிதிலமடைந்த நிலையில், அவரது இருசக்கர வாகனம் மீட்கப்பட்ட உக்கடம், கழிவுநீர் பண்ணைக் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

  வியாழக்கிழமை கிடைத்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவை, கெம்பட்டி காலனியைச் சேர்ந்த அவரது நண்பர் குணசேகரன் என்பவரிடம் விசாரித்ததில், கடந்த மே 24-ஆம் தேதி இரவு ராமநாராயணனுடன் அவர், உக்கடம் சிக்னல் வரை வந்து சென்றதாகத் தெரிவித்தார்.ஆனால், அன்றிரவு 10 மணிக்கு மேல் அவரை அந்த இடத்துக்கு யாரோ மர்ம நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். தற்கொலை செய்வதாக இருந்தாலும் அவர் அந்த இடத்தை தேர்வு செய்ய வாய்ப்பில்லை. எனவே, அவரது உயிரிழப்பில் கண்டிப்பாக யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai