Enable Javscript for better performance
கார்பைட் மாம்பழங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திடீர் ஆய்வில் கிடங்குகளிலும், சில்லறை நிறுவனங்களிலும் கார்பைட் கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்டிருந்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வியாழக்கிழமை கோவை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராமசாமி தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், கார்பைட் கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்டிருந்த 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் அனைத்தும் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.

    தொடர்ந்து, இம்மாதிரி கார்பைட் கற்களைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai