Enable Javscript for better performance
தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்:விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்:விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி வெற்றி

    By கோவை,  |   Published on : 13th June 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் நடைபெறும் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி உத்தரப் பிரதேச அணியை வென்றது.

    கோவை, கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்:

    இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 14-7 என்ற கோல் கணக்கில் உத்தரப்பிரதேச அணியையும், இமாச்சல் 18-2 என்ற கோல் கணக்கில் ஆந்திரத்தையும் சத்தீஸ்கர் 10-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியையும் வென்றன.

    மணிப்பூர் 10-8 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானையும், மகாராஷ்டிரம் 19-5 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டையும், ஹரியானா 23-14 என்ற கோல் கணக்கில் பிகாரையும், உத்தரகண்ட் 4-0 என்ற கோல் கணக்கில் பாண்டிச்சேரி அணியையும் வென்றன.

    பஞ்சாப் 11-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவையும், உத்தரப்பிரதேசம் 20-15 என்ற கோல் கணக்கில் கர்நாடகத்தையும், ஹரியானா 17-12 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தையும், ஜார்க்கண்ட் 20-8 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டையும், இமாச்சல் 22-6 என்ற கோல் கணக்கில் மத்தியப்பிரதேச அணியையும் வென்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai