சுடச்சுட

  

  பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் கிராமங்களில் என்.பி.ஆர். புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

  By கோவை  |   Published on : 13th June 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் துடியலூர் உள்வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) அடையாள அட்டை எடுக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியது.

  கோவை வடக்கு வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு அடையாள அட்டைக்காக 2-ஆம் கட்டமாக புகைப்படும் எடுக்கும் பணி நடைபெற உள்ளது.

  முதல் சுற்றில் புகைப்படம் எடுக்காதவர்கள் என்.பி.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் மற்றும் முதல் சுற்றில் புகைப்படம் எடுத்து தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் தற்போது புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

  புகைப்படம் எடுக்க வரும்போது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்குப் புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகிய அனைத்து ஆவணங்களையும் எடுத்து வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

  கிராமத்தின் பெயர், புகைப்படம் எடுக்கும் இடம், புகைப்படம் எடுக்கும் நாள் விவரம்:

  பெரியநாயக்கன்பாளையம் உள்வட்டம்:

  13, 14-ஆம் தேதி, எண் 4. வீரபாண்டி அரசு துவக்கப்பள்ளி. 15, 16-ஆம் தேதி கூடலூர் பஞ்சாயத்து அலுவலகம். 19, 20-ஆம் தேதி நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பளையம். 21, 21-ஆம் தேதி அசோகபுரம் அரசு துவக்கப்பள்ளி.

  துடியலூர் உள்வட்டம்: வரும் 23, 24-ஆம் தேதி எண் 24 வீரபாண்டி அரசு நடுநிலைப்பள்ளி. ஆனைகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 25, 26-ஆம் தேதி சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 27, 28-ஆம் தேதி சோமையம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, காளப்பநாயக்கன்பாளையம். 29, 30-ஆம் தேதி நஞ்சுண்டாபுரம் அரசு தொடக்கப்பள்ளி. ஜூலை 1, 2-ஆம் தேதி பன்னிமடை அரசு மேல்நிலைப்பள்ளி.

  இத்தகவலை, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai