சுடச்சுட

    

    ரூ. 1.6 கோடி மதிப்புள்ள 800 பவுன் தங்கத்துடன் சகோதரர்கள் மாயம்

    By கோவை,  |   Published on : 13th June 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் ரூ. 1.6 கோடி மதிப்புள்ள 800 பவுன் தங்கத்துடன் தலைமறைவான நகைக்கடை சகோதரர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து, போலீஸார் கூறியது:

    கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் முத்துக்குமார் (40). இவர் வெரைட்டிஹால் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வைசியாள் வீதியில் ஏலச் சீட்டு போன்று, மாதாந்திர தங்கம் சேமிப்பு சீட்டு நடத்தி வருகிறார்.

    அவரிடம் 20 நகைக்கடை உரிமையாளர்கள் சீட்டு போட்டுள்ளனர். மாதந்தோறும் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் தங்கம் உறுப்பினர் ஒருவருக்கு கொடுக்கப்படும். இது நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்துள்ளது.

    முத்துக்குமாரிடம் வைசியாள் வீதியில் நகைக்கடை வைத்துள்ள கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் சீட்டு போட்டிருந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர்களுக்கான முறை வந்துள்ளது. அவர்களிடம் முத்துக்குமார் ரூ. 1.6 கோடி மதிப்புள்ள 800 பவுன் தங்கம் கொடுத்துள்ளார். தங்கத்தை பெற்றதற்குப் பின் அவர்கள் சீட்டு கட்டவில்லையாம்.

    இதனால் முத்துக்குமார் 2 தினங்களுக்கு முன் அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்தேபோது, வீடு மற்றும் கடையைப் பூட்டி விட்டு அவர்கள் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து, வெரைட்டிஹால் போலீஸில் முத்துக்குமார் புகார் அளித்தார். ஆய்வாளர் திருமேனி (பொறுப்பு) தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai