சுடச்சுட

    

    கோவையில் பல்வேறு நகைப் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

    கோவை மாநகரில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் கே.சுகுமாரன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.பீளமேடு பகுதியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில், வழிப்பறித் திருடர்களான உடுமலையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (21), ரூபன் ராஜ் (20) ஆகியோரைப் பிடித்தனர்.அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கோவை விமான நிலையம் அருகே சுற்றித் திரிந்த அவர்களது கூட்டாளிகளான ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் (28), உடுமலையைச் சேர்ந்த ஆகாஷ்ராஜ், பாண்டியன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 18.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai