சுடச்சுட

    

    அண்ணா பல்கலை. கோவை, நெல்லை மண்டல மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

    By கோவை  |   Published on : 14th June 2014 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையை அடுத்த கிணத்துக்கடவில் உள்ள ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் பேசியது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் துறை ஒத்துழைப்பிற்கான மையம் மூலமாக தமிழக அளவிலான வேலைவாய்ப்பு திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துறை மாணவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கும் குறிக்கோள் இல்லாமல், பல்கலைக்கழகத்துடன் இணைந்த அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    இம்முயற்சியால் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் 2,600 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முயற்சியால் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம் என்றார்.

    விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை மற்றும் திருநெல்வேலி மண்டலங்களைச் சேர்ந்த 220 பொறியியல் கல்லூரிகளிலிருந்து, இன்போசிஸ் நிறுவனத்திற்கு 279 மாணவர்களுக்கும், காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 891 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் துறை ஒத்துழைப்பிற்கான இயக்குநர் தியாகராஜன், இன்போசிஸ் நிறுவனத்தின் அருண்பாபு, காக்னிசன்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் முதுநிலை இயக்குநர் ராஜீவ் மேனன், கல்லூரி தலைவர் மோகன்ராம், முதல்வர் சுதா மோகன்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai