சுடச்சுட

  

  கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் நடந்து வரும் அரசுப் பொருட்காட்சியை கடந்த 35 நாள்களில் 2 லட்சத்து 80,816 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.39 லட்சத்து 32,875 வருவாய் கிட்டியுள்ளது.

  ஆண்டுதோறும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாயிலாக அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோவை அரசு பொருட்காட்சி மே 3 ஆம் தேதி தொடங்கியது. பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இப்பொருட்காட்சியில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, கல்வித் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் அங்காடிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

  கடந்த 35 நாள்களில் 2 லட்சத்து 24,943 பெரியவர்களும், 55,873 சிறியவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 80,816 பேர் பொருட்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.39 லட்சத்து 32,875 வருவாய் கிடைத்துள்ளது. இப்பொருட்காட்சி இன்னும் 10 நாள்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai