சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 79 மையங்களில் சுமார் 31,746 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

    இத்தேர்வினை நடத்த 110 முதன்மை கண்காணிப்பாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், ஒவ்வொரு மையத்திற்கும் தணிக்கை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai