சுடச்சுட

    

    உக்கடம் பெரிய குளத்தின் கரைகளை மேம்படுத்த அமைச்சர் ஆலோசனை

    By கோவை,  |   Published on : 14th June 2014 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை உக்கடம் பெரிய குளத்தின் கரைகளை மேம்படுத்தி போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் க.லதா, மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி மற்றும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    உக்கடம் பெரிய குளம் கரையை அகலப்படுத்தி மேம்பாட்டுப் பணிகள் செய்து இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் குளக்கரையில் செல்வதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து குளக்கரையை மேம்படுத்தும் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பெருமாள்சாமி, நகரமைப்பு குழுத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai