சுடச்சுட

  

  சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

  இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துவது, ஆராய்ச்சியின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது, அறிவியலில் புதிய மாற்றங்களை உருவாக்குவது ஆகியவற்றுக்கு சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஊக்கமளித்து வருகிறது.

  இதில் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் ஆய்வுக்கு ஒப்புதல் அளித்து விருது வழங்கப்பட்டுள்ளது. இக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்று நிலைகளில் ஆராய்ச்சிக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் மூன்று விருதுகளும், மாநில அளவில் ஐந்து விருதுகளும், தேசிய அளவில் 10 விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

  இக் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் ஆய்வுத் திட்டங்கள் அனுப்பியுள்ளதால் கல்லூரிக்கு "இன்னாவேட்டிவ் கேம்பஸ்' என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

  இக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட தேசிய அளவிலான விருது இறுதியாண்டு மாணவர்களான எம்.அபிலாஷ், வி.என்.அகிலேஷ், பி.பவித்ரா, எஸ்.சஞ்சனா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

  என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, செயலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக் கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் ஓ.டி.புவனேஷ்வரன் ஆகியோர், விருது பெறக் காரணமான முதல்வர் கே.பொற்குமரன், மின்னணுவியல் துறைத் தலைவர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் விருது பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai