சுடச்சுட

    

    சூலூர் வட்டம், கணியூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

    இம்முகாமை சூலூர் தனிவட்டாட்சியர் ஹபிபூர் ரகுமான் துவக்கிவைத்தார்.

    ஊராட்சித் தலைவர் எஸ்.எஸ்.செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில், 283 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட 172 மனுக்கள் அப்போதே பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது.

    மீதமுள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் தீர்வுகாணப்படுமென தனிவட்டாட்சியர் ஹபிபூர் ரகுமான் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai