Enable Javscript for better performance
கம்பெனி செயலர் படிப்புக்கான வகுப்புகள் 23-இல் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கம்பெனி செயலர் படிப்புக்கான வகுப்புகள் 23-இல் துவக்கம்

    By கோவை  |   Published on : 14th June 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பெனி செயலர் படிப்புக்கான வகுப்புகள் கோவையில் வரும் 23-ஆம் தேதி துவங்குகிறது.

    கம்பெனி செயலர்களை மேம்படுத்தவும், அவர்களின் பணியை முறைப்படுத்தவும் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சான்றிதழ் பெற்று, உறுப்பினர்களாக இருப்பவர்கள் கம்பெனி செயலர்களாக நியமனம் பெறத் தகுதி பெறுகின்றனர்.

    இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் கோவை கிளையின் 46-ஆவது பேட்ச் கம்பெனி செயலர் வகுப்புகள் வரும் 23-இல் துவங்குகின்றன.

    கம்பெனி செயலாளர்கள் அடிப்படை வகுப்புகள் மற்றும் பிரதிநிதிகளுக்கான நிகழ்வுகள் துவங்க உள்ளன. வரும் டிசம்பர் 2014-இல் கம்பெனி செயலாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. வார இறுதி மற்றும் தினசரி பகுதிநேர வகுப்புகள் இந்த மையத்தில் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai