சுடச்சுட

  

  குடிநீர் பாதுகாப்புச் சட்டம்: மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

  By கோவை,  |   Published on : 14th June 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடிநீர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என இந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

  இந்திய மக்கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

  சம்பா சாகுபடிக்கே பவானிசாகர் அணை திறக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொடிவேரி பாசனத்திற்கும், குறுவை சாகுபடிக்கும் பவானிசாகர் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது ஆகும்.

  பருவமழை குறைந்து போனதாலும், ஆலைகள் தண்ணீரை மாசுபடுத்துவதாலும் பல இடங்களில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.10-க்கு தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. மத்திய அரசு ரயில் நிலையங்கள் மூலமாக ரூ.15-க்கு விற்பனை செய்து வருகிறது.

  குடிமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இதனை அரசுகள் செய்யத் தவறிவிட்டன. எனவே பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்க குடிநீர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

  தமிழகத்தில் மதுக் கொள்கைகளை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கொள்கைகளை மாற்றியமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியத்தின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

  தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் நீரா தயாரிப்பை ஊக்குவித்து, உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு உருவாக்கித் தர வேண்டும். தமிழக நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இக்கூட்டத்தில் அமைப்பாளர்கள் விஸ்வநாதன், தங்கராசு, அருண், ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai