சுடச்சுட

    

    கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் தங்கம் பறிமுதல்

    By கோவை,  |   Published on : 14th June 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஷார்ஜாவிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கோவையில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலையில் ஷார்ஜாவிலிருந்து வந்த ஏர்அரேபியா விமானத்திலிருந்து இறங்கிச் சென்ற பயணிகளிடம் அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் (28) என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது எமெர்ஜென்ஸி லைட்டின் உள்ளே பேட்டரிகள் வைக்கும் இடத்தில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து அவர் கடத்த முயன்றது தெரியவந்தது. அவரிடமிருந்து 928 கிராம் அளவுள்ள எட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஷார்ஜாவில் ஒரு துணிக் கடையில் வேலை செய்து வந்ததாகவும், தங்கக் கட்டிகளை கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனீஷ் என்பவரிடம் கோவை விமான நிலையத்தில் வைத்து கொடுக்க வந்ததாகவும் அப்துஸ் சலாம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சொன்னது போல் கோவை விமான நிலையத்தில் யாரும் காத்திருக்கவில்லை. அப்துல் சலாம் கூறும் தகவல்கள் உண்மைதானா என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai