சுடச்சுட

    

    கோவை மாநகராட்சி பெண் அலுவலர், செவிலியர் ஆகியோர் வெள்ளிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    கோவை காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமாரவேல் (34). சொத்து வரி ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்யக் கோரி, மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பித்தார். இதற்காக மாநகராட்சி பெண் அலுவலர் வசந்தகுமாரி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முத்துகுமாரவேல், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

    ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மேற்கு மண்டல அலுவலகத்தில் இருந்த வசந்தகுமாரியிடம் முத்துகுமாரவேல் அண்மையில் கொடுத்தார். அப்போது வசந்தகுமாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

    இதையடுத்து வசந்தகுமாரியை மாநகராட்சி ஆணையர் க.லதா, வெள்ளிக்கிழமை பணி இடைநீக்கம் செய்தார்.

    செவிலியர்: காந்தி பார்க் ஆர்.கே. பாய் நகர் நல மையத்தில் செவிலியராகப் பணியாற்றுபவர் வீரம்மாள். இவருடைய கணவர் குடிபோதையில் நகர்நல மையத்தில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீரம்மாளை மாநகராட்சி ஆணையர் வெள்ளிக்கிழமை பணி இடைநீக்கம் செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai