Enable Javscript for better performance
\\\"பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'

    By கோவை  |   Published on : 14th June 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உழைக்கும் மகளிர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி.யின் உழைக்கும் மகளிர் சங்கத்தின், கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஜே.கலா தலைமையில் பாப்பநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

    பொள்ளாச்சியில் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் மாணவர் விடுதியில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் கடத்தி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், சிறுமிகள் இருவருக்கும் இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டதால் அவமானம் தாங்காமல் சிறுமி ஒருவர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், போதிய பாதுகாப்பு இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது. இது போன்ற பாலியல் வன்முறையை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதே நேரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் விடுதி நடத்தி வந்த நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்கவும், வழக்கை விரைந்து முடிக்கவும் பெண்களை நீதிபதிகளாக கொண்ட சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.

    பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிவராணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் சிறுமிகளை அனுமதித்து உயர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.சித்ரா, ஏ.ராமசுலோசனா, கே.விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டன21

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai